திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு மார்ச் 28 பட்டாபிஷேகம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடந்தது. பின், சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார புராண கதை கூறப்பட்டது. தீபாராதனை முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் அருள்பாலித்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம், நாளை (மார்ச் 29) மதியம் 12.45 முதல் 1 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, இன்றிரவு 7 முதல் 7.15 மணிக்குள், கோயில் ஆறுகால் பீடத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.