Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: ஏழரைச் சனி எட்டில் குரு ... மகரம்: இடியாப்ப சிக்கல் தேவை நிதானம்! மகரம்: இடியாப்ப சிக்கல் தேவை நிதானம்!
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
தனுசு: சுகமான ஆண்டு வளமான வாழ்வு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
05:04

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடுநிலையுடன் செயல்படும்  தனுசுராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ஆதாய ஸ்தானத்தில் அமர்வு பெற்று வருடம் முழுவதும் அளப்பரிய நற்பலன்களை தருகின்றனர். ஆறாம் இடத்தில் உள்ள குரு, மே28ல் பெயர்ச்சியாகி ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வருகிறார். இதனால் குருவின் அனுகூலமும் பரிபூரணமாக கிடைத்து வாழ்வு வளம்பெறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு இனிதாக உருவாகும்.ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ள கேது மட்டுமே, புத்திரர்கள் வகையில் சிறு அளவிலான சிரமம் தருவார். ஆன்மிக வழிபாடுகளை அதிகரித்து சிரம பலன்களை சரிசெய்து கொள்ளலாம். பூர்வ சொத்து உள்ளவர்கள். அவற்றைப் பராமரிக்க நம்பகமானவர்களை பணியமர்த்துவது நன்மை பெற உதவும்.குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும். தம்பி, தங்கையின் அன்பு, பாசம் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நினைத்த திட்டம் நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களிடம் எதிரிபோல் நடந்தவர்கள், ஏதாவது காரியம் சாதிக்க நல்லவர்கள் போல் இனிய முகம் காட்டி நடந்துகொள்வர். அவர்களிடம் நிதானித்து பழகுவது நல்லது. இளம் வயதினருக்கு திருமணம் நடத்த குருவருள் பலமாக துணைநிற்கும்.உடல்நலம் நல்ல விதமாக அமைந்து நிம்மதியான மனதுடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவியிடையே புரிதல் தன்மை வளர்ந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காத்திடுவர். உறவினர்களின் குடும்பத்திலும் மங்கல நிகழ்ச்சியை உருவாக்க முக்கிய காரணமாக செயல்படுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் உங்கள் வாழ்க்கை சிறப்பான வகையில் நடக்க அக்கறையுடன் உதவுவர். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த நன்மை முழு அளவில் வந்து சேரும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள செலவில் விமரிசையாக நடத்துவீர்கள்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் தாராள செலவில் அபிவிருத்தி பணிகளைச் செய்வீர்கள். வியத்தகு அளவில் உற்பத்தியில் வளர்ச்சியும் லாபமும் பெறுவீர்கள். எதிர்பாராத அளவில் அதிக ஒப்பந்தம் கிடைத்து மனதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொள்வீர்கள். பொருட்களின் தரத்தை உயர்த்த கூடுதல் தொழில்நுட்பம் நிறைந்த இயந்திரங்களை வாங்குவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக கிடைத்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பணி கிடைக்கும்.

வியாபாரிகள்: கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து வியத்தகு அளவில் விற்பனை அதிகரிக்கும். அதிக லாபவிகிதம் கிடைக்கும். எளிய முயற்சியால் நிலுவைப்பணம் வசூல் செய்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும். சரக்கு கொள்முதல் செய்ய புதிய நிறுவனங்களின் அறிமுகம், உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: ஆர்வமுடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீடு, வாகனக்கடன் பெற அதிகாரியின் சிபாரிசு பெற அனுகூலம் உண்டு. குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற அக்கறையுடன் செயல்பட்டு கிடைக்கிற வேலைவாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து பணி சிறக்க உதவுவர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையுடன் பணிசெய்து வேலைகளை விரைவில் முடிப்பர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலம் பேணுவதில் கூடுதல் கவனம் வேண்டும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அதிக ஆர்டர் கிடைக்கும். உற்பத்தி அதிகரிக்கும். லாபம் அபரிமிதமாக இருக்கும். தொழில்நுட்ப இயந்திரம் புதிதாக வாங்க அனுகூலம் உண்டு. இளம் பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும்.

மாணவர்கள்: சுற்றுப்புற சூழ்நிலை இனிதாக அமைந்து படிப்பதில் முழு கவனம் கொள்வர். ஒருமனப்பட்ட மனதுடன் படிப்பதால் மார்க் அதிகரிக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். பெற்றோர் பாசத்துடன் உதவுவர். ஆசிரியரின் வழிகாட்டுதல் மிகுந்த ஊக்கம் தரும். படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்கு முயல்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கவுரவமான பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: எண்ணமும் செயலும் ஈடேறி அரசியல்பணியை பிரகாசிக்க செய்யும். உங்களிடம் ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கை கொள்வர். திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கும். எதிர்ப்பாளர்களால் தொல்லை வராத சுமூக நிலைமை உருவாகும். அரசியல்பணிக்கு புத்திரரை பயன்படுத்தினால் இடைஞ்சல் தான் வரும். பணவரவு உண்டு.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதி, இடுபொருட்கள் திருப்திகரமான அளவில் கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் சராசரி அளவில் இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள் இழுத்தடிக்கும். நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.

செல்ல வேண்டிய கோயில்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் அதிர்ஷ்டகரமாக பொன், பொருள் சேரும்.

பரிகார பாடல்: பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

பகிர்க copied
 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar