பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண்கள், தினமும் கொடி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, அம்மனை வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவன்று, கோயிலின் முன்பு, வீடுகளிலும் பெண்கள் பொங்கல் வைத்து, வழிப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்றுமுன் தினம் முதல் நற்று பிற்பகல் வரை, நகர், கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், வாயில் சூலம் குத்தியும், கரகம், ரதம் இழுத்தப்படி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனால் விருதுநகர் விழாக் காலம் பூட்டிருந்தது.இன்று மாலை, வெயிலுகந்தம்மன் மற்றும் மாரியம்மன் திருதேரில் எழுந்தருள, திருதேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்துள்ளது.