பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 7,500 பேர் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். திருத்தணி, காந்தி நகரில் அமைந்து உள்ளது திரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில், இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த, மாதம் 21ம் தேதி கொடிஏற்றத்துடன் துவங்கியது.விழாவை ஓட்டி மூலவர் அம்மனுக்கு தினமும் காலையில், சந்தான காப்பு மற்றும் மாலையில் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம், காலை, 9:30 மணிக்கு துரியோதனன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில், பூங்கரகத்துடன் திருவீதியுலா வந்து தீமிதிக்கும் குண்டம் அருகே எழுந்தருளினார். பின்னர், மாலை, 6:30 மணிக்கு, 7,500 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர்.விழாவில், திருத்தணி, தரணிவராகபுரம், முருக்கம்பட்டு, பட்டாபிராமபுரம், காசிநாதபுரம் மற்றும் அதை சுற்றியு உள்ள கிராமங்களில் இருந்து, 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.திருத்தணி ஏ.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.