விழுப்புரம்: அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் 506வது ஆண்டு விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது.திருக்கோவிலூர் தாலுகா, அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. அன்று மதியம் 1 மணிக்கு அமைச் சார் அம்மனுக்கு சாகை வார்த்து, இரவு கூத்தாண்டவர் சுவாமிக்கு கொடியேற்று விழா நடக்கிறது.அதை தொடர்ந்து 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு மகாபாரத ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. வரும் 30ம் தேதி மாலை திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 1ம் தேதி காலை ஆவாகனம் செய்து, பெரிய தேரில் முழு உருவத்துடன் கள பலிக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். அன்று மாலை பொதுமக்கள் பொங்கலிட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.மாலை 5 மணிக்கு சுவாமி அழுகளம் சென்றடையும் போது, அரவாணிகள் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து 7ம் தேதி மாலை தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசணம் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை ராமச்சந்திர பிரபு மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.