இந்த மாதம், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்வு பெறுகிற ஐந்து கிரக சேர்க்கையில் சுக்கிரன் மட்டுமே நற்பலன் தருவார். மற்ற கிரகங்கள் பிரச்னை தரும். ஆதாய ஸ்தானத்தில் உள்ள ராகுவும், உச்சம் பெற்ற சனியும் ஓரளவுக்கு நன்மைக்கு தருவார்.வாழ்வில் வளம் பெற தேவையான ஏற்பாடுகளை தகுந்த முன்யோசனையுடன் செயல்படுத்துவீர்கள். பேச்சில் நீதி, நியாயம் நிறைந்திருக்கும். சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். நம்பகத்தன்மை குறைவான எவருக்கும் வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம், வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். புத்திரர்கள் சிறு உடல்நலக்குறைவுக்கு உள்ளாவர். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவுக்கேற்ப கூடுதல் செலவும் ஏற்படும். மகளின் ஜாதக யோக பலன், இஷ்டபெண் தெய்வ அருள், வளம் தருகிற வாழ்வை உருவாக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். நல்ல பழக்கவழக்கம் உடையோருக்கு இதுபற்றிய கவலை வேண்டாம். கடன் தொந்தரவு குறையும். கணவன், மனைவியிடையே சிறு கருத்து வேறுபாடுகளால் மனக்கஷ்டம் அடைவர். குடும்பநலன் கருதி ஒற்றுமையாக இருப்பது நல்லது. நண்பர்களின் செயல்களில் குறைகாணுவதை தவிர்ப்பதால் நட்புசீராக இருக்கும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தியும், லாபமும் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை வழக்கம் போல் நடந்து, கடந்த மாத லாப அளவை எட்டலாம். பணியாளர்கள், அதிக பொறுப்புணர்வுடன் பணியாற்றினால் மட்டுமே நற்பெயரை காக்கலாம். ஓரளவு சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் பணவரவுக்கேற்ப செலவு மேற்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்கள், பணியிட சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவதால் சகபணியாளர்களின் அதிருப்திக்கு ஆளாவதை தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை பணவரவில் ஓரளவு முன்னேற்றம் அடைவர்.அரசியல்வாதிகள் எதிரிகளால் வரும் தொந்தரவை சமாளிக்க கடும் செலவை எதிர்கொள்வர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் திருப்திகரமான லாபம் கிடைக்கும். மாணவர்கள், வெளியிடங்களில் சுற்றுவதை குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் திட்டமிட்ட செயல்களில் நன்மை அதிகரிக்கும். உஷார் நாள்: 18.4.13 காலை 6.47- 20.4.13 மாலை 4.48. வெற்றி நாள்: மே 4,5 நிறம்: சிமென்ட், பச்சை எண்: 8.9
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »