பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
ஆழ்வார்குறிச்சி: கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள், பாப்பான்குளம் ராமசாமி கோயில் ஆகிய இரு கோயில்களிலும் வரும் 24ம்தேதி தேர்த்திருவிழா ஒரே நாளில் நடக்கிறது. கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் கடந்த ஏப்.16ம்தேதியும், பாப்பான்குளம் ராமசாமி கோயிலில் கடந்த 15ம்தேதியும் கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது. கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணிஅம்பாள்கோயிலில் வரும் நாளை (19ம்தேதி) ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தலும், 22ம்தேதி நடராஜர் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தலும், 23ம்தேதி நடராஜர் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலையில் பச்சை சாத்தி கோலத்திலும் பின்னர் கங்காளநாதர் எழுந்தருளலும் நடக்கிறது. 24ம்தேதி தேர்த்திருவிழா அன்று காலை 4மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுலும், காலை 7.15 மணியளவில் தேரோட்டமும் நடக்கிறது. இரவு 9மணியளவில் அம்பாள் திருத்தேர் உலா நடக்கிறது. 25ம்தேதி காலை 8மணிக்கு சுவாமி அம்பாள் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. * பாப்பான்குளம் ராமசாமி கோயிலில் ராமசாமி, சீதை, லெட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். கடையம் வட்டாரத்தில் பாப்பான்குளத்தில் மட்டும் தான் ராமருக்கு தேர் உள்ளது. இங்கு வரும் 24ம்தேதி காலை ராமர், சீதை, லெட்சுமணர் ஆகியோர் கேடயத்தில் தேருக்கு எழுந்தருளலும், பின்னர் தேரோட்டமும் நடக்கிறது. 25ம்தேதி சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.