பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிவகாமி சமேத நடராஜ பெருமான் கோவிலில், சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று மாலை 6:00 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, அரசமரம் நாகாலம்மன் கோவிலில், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை மாலை 5:00 மணிக்கு, கோவில் வரிசை புறப்பட்டு, சாந்தாலீஸ்வரர் கோவில் குளக்கரையை சென்றடையும். மாலை 6:00 மணிக்கு, குடம் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் வர்ணித்து, ஜலம் திரட்டி, கோவிலை வந்தடையும். இரவு 8:00 மணிக்கு, பவானி அம்மன் நாடகக் குழுவினரின், மின்னல் ஒளி சிவ பூஜை நகைச்சுவை கட்டைக் கூத்து நடைபெறும். இரவு 12:00 மணிக்கு, கங்கையம்மன் கண் திறக்கப்பட்டு, அம்மன் ஊர்வலம் நடைபெறும். நாளை மறுதினம்(21ம் தேதி) பகல் 1:00 மணிக்கு, புஷ்ப மண்டபத்தில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, கூழ் வார்க்கப்படும். இரவு 7:00 மணிக்கு, அம்மனை வர்ணித்து கும்ப படையிலிட்டு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.