பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
09:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நாளை(ஏப்.,23) அம்மனுக்கும், சுவாமிக்கும் காலை 8.17 மணி முதல் 8.41க்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.,22 இரவு 11 மணி முதல் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் வாகனம் செல்லவும், நிறுத்தவும் அனுமதி இல்லை. நாளை காலை 5 மணி முதல் திருக்கல்யாணத்திற்கு காரில் வருபவர்கள், பாஸ் இல்லையெனில் மாசி வீதிகளில் நிறுத்த வேண்டும். போலீசார் வழங்கியுள்ள மஞ்சள் நிற கார் பாஸ் ஒட்டிய வி.ஐ.பி.,க்களின் வாகனங்கள், யானைக்கல், வடக்கு வெளி வீதி, பழைய டி.வி.எஸ்., சந்திப்பு, மேலமாசிவீதி, மேபிளவர் சந்திப்பு, மேலக்கோபுரத் தெரு வழியாக, மேலஆவணிமூலவீதியில் நிறுத்த வேண்டும். திருக்கல்யாணம் முடிந்ததும், மேலக்கோபுர வாசல் தெரு, மேலமாசிவீதி வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். தற்காலிகமாக மேலக்கோபுரத் தெரு ஒருவழிப்பாதையாக மாற்றியமைக்கப்படும். நீல நிற கார் பாஸ் ஒட்டிய வாகனங்கள், தெற்காவணி மூல வீதியிலும், ரோஸ் நிற பாஸ் உள்ள கார்கள், வடக்காவணி மூல வீதியிலும் நிறுத்த வேண்டும்.
ஏப்.,24 எதிர்சேவை: ஏப்.,24 மாலை 5.20 மணி முதல் 6.20 மணி வரை, கள்ளழகர் எதிர்சேவைக்காக, மதுரை அவுட்போஸ்ட் அம்பலக்காரர் மண்டபத்திற்கு சுவாமி வந்தவுடன், தமுக்கம் முதல் அவுட்போஸ்ட் வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டிலிருந்து கீழவாசல், சிம்மக்கல் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம், காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும். ஆற்றின் தென்பகுதியில் இருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோட்டிற்கு செல்ல, கோரிப்பாளையம், கோகுலே ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, தாமரைத்தொட்டி வழியாக செல்ல வேண்டும். மேலூர் ரோட்டிற்கு செல்ல, கோரிப்பாளையம், பனகல் ரோடு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும்.
ஏப்.,25ல் ஆற்றில் இறங்குதல்: ஏப்.,25ல் அதிகாலையில் இருந்து, கள்ளழகர் குதிரை வாகனத்தில் ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வரையிலும் ஏ.வி. பாலம், யானைக்கல் பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. பக்தர்களின் வசதிக்காக, சிம்மக்கல், கீழவாசலில் தற்காலிக பஸ் ஸ்டாப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர் பகுதியில் இருந்து வரும் வி.ஐ.பி.,க்கள் மற்றும் கார் பாஸ் உள்ளவர்கள், அவுட்போஸ்ட், ஆவின் சந்திப்பு, பனகல் ரோடு வழியாக ஏ.வி. பாலத்திற்கு வரவேண்டும். ஆற்றின் தென்பகுதியில் இருந்து வருபவர்கள், கீழவாசல், கீழமாரட்வீதி, நெல்பேட்டை வழியாக பாலத்திற்கு வரவேண்டும். பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள், தெற்குமாரட்வீதி, செயின்ட்மேரீஸ் சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை, காமராஜர் ரோடு, குருவிக்காரன் சாலை பாலம், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும். தத்தனேரி ரோட்டில் இருந்து செல்ல வேண்டிய வாகனங்கள், எல்.ஐ.சி., சந்திப்பு, குலமங்கலம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, பி.டி.ராஜன் ரோடு வழியாக செல்ல வேண்டும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.