பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
10:04
மதுரை: மதுரையில் (ஏப்., 28) நடக்கும் கள்ளழகர் பூப்பல்லக்கு நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் பல்லக்கு ஆழ்வார்புரம் ராமவிலாஸ் நாயுடு மண்டபத்திலிருந்து ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு செல்வதால், யானைக்கல் மேம்பாலத்திலிருந்து நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் செல்ல வேண்டிய வாகனங்கள், எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு, கான்சாபுரம், அரசன் சுவீட்ஸ் சந்திப்பு, பி.டி.ராஜன் ரோடு, ஜவஹர் ரோடு, யூனியன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் சந்திப்பு, புது நத்தம் ரோடு, தாமரைத்தொட்டி, அழகர்கோவில் ரோடு, புதூர் 120 அடி ரோடு, மேலூர் ரோடு வழியாக செல்ல வேண்டும். ஐ.ஒ.சி., ரவுன்டானாவிலிருந்து கோகலே ரோடு வழியாக தமுக்கத்திற்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. புது நத்தம் ரோடு, பி.டி.ராஜன் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டிலிருந்து நகருக்குள் செல்லும் வாகனங்கள், ரேஸ்கோர்ஸ் ரோடு, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர் ஆர்ச், மெயின் ரோடு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம், காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர் பாளையம் ரோடு, சென்ட்மேரீஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதியாக செல்ல வேண்டும். காந்திமியூசியத்திலிருந்து தமுக்கம் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு போலீஸ் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.