கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் டி.புகுக்குப்பம் ஸ்ரீ பூங்கொடி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.கண்டமங்கலம் ஒன்றியம் டி.புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூங்கொடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தேரோட்டம் நடந்து வருகிறது. இக்கோவிலில் பயன்படுத்தி வந்த "சகடைத் தேரை கடந்தாண்டு மாற்றி, 33 அடி உயரத்தில் புதிய கட்டுத்தேர் உருவாக்கினர். மாவட்டத்திலேயே அதிக உயரமுடைய இந்த தேரில், நேற்று காலை சுவாமி வீதியுலா நடந்தது. விழாவையொட்டி காலை 9:15 மணிக்கு பூங்கரகத்துடன், வினாயகர், முருகன் பரிவார சுவாமிகள் புடைசூழ, பூங்கொடி அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து, தேரில் வைத்தனர். பின்னர் திருவக்கரை சந்திரமவுளீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி மேனகா தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.கோவில் நாட்டாண்மைகள் ஜெயராமன், லட்சுமணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.