பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் இன்று மூல நட்சத்திர அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, பஞ்சவடீயில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று (29ம் தேதி) மாலை 4.30 மணிக்கு மூல நட்சத்திர அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆஞ்ஜநேயருக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், இணைச் செயலாளர் திருமலை ஆகியோர் செய்துள்ளனர்.
கிருஷ்ணன் சுவாமிகள் தரிசனம்: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் நேற்று சாமி தரிசனம் செய்தார். பஞ்சமுக ஜெயமாருதி சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் நரசிம்மன், இணைச் செயலாளர் திருமலை ஆகியோர், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளை, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். கோவிலில் உள்ள ராமர் சன்னதி, பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சன்னதிகளில் வழிபட்டு, மங்களாசாசனம் செய்து உலகம் செழிக்க பிரார்த்தித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நீதிபதி ராமபத்திரன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் உடனிருந்தனர்.