வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா விமரிசையாக நடந்தது. நாள்கால் நாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. 11 ம் நாள் காப்புக்கட்டு வைபவம் முடிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று கரகம் எடுத்து வந்தனர். கோயிலில் அம்மன் எழுந்தருளல் செய்து வழிபாடு நடந்தது. 12 ம் நாள் முக்கிய நிகழ்வான பூக்குழி விழா நடந்தது. குழியில் நெருப்பு வளர்க்கப்பட்டது. பக்தர்கள் வேண்டுதலுக்காக எண்ணெய் விட்டு வழிபட்டனர். மாலையில் விரதமிருந்த 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெருப்பில் இறங்கினர். இரவில் பக்தர்கள் மீண்டும் ஊர்வலமாக சென்று கரகம் கரைத்தனர். விழா நடந்த 12 நாட்களும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.