பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
திருப்போரூர்: வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், ராமநவமி விழா நேற்று, திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவடைந்தது.திருப்போரூர் பஜார் வீதியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராமநவமி விழா, கடந்த, 19ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, பூதேவி, ஸ்ரீதேவியுடன் வெங்கடேச பெருமாளுக்கு, விசேஷ திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது.நேற்று, பிரதான விழாவான திருக்கல்யாண உற்சவத்துடன், ராமநவமி விழா நிறைவு பெற்றது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, திருவீதி உலா உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்.