குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன் எழுந்தருளிய குருபகவான் சன்னதியில் சித்திரை உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் பட்டர்ஸ்ரீதர் குருபகவானுக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனைகள் செய்தார். நேற்று தங்கக் கவசத்தில் குருபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், தலைமை கணக்கர் வெங்கடேஷன் செய்திருந்தனர்.