பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா இன்று நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலில் இன்று இரவு 11 மணியிலிருந்து நாளை 15ம் தேதி காலை 10 மணி வரை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 11 மணியளவில் மூலவர் அபிஷேகம், மதியம் 1 மணியளவில் உச்சிகால பூஜை நடக்கிறது. இவ்விழாவையொட்டி பெரம்பலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமிக்கு பூ கொண்டு செல்லப்படும். வான வேடிக்கை கரகாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.