குருவித்துறை: சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோயிலில் நேற்றிரவு குருபெயர்ச்சி விழா நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன், குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்றிரவு 9.18 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியானார். இதையொட்டி குருபகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அறிநிலையத்துறை மண்டல இணை ஆணையர் முத்துதியாகராஜன், ஊராட்சி தலைவர் கர்ணன், துணைத் தலைவர் பன்னீர் பங்கேற்றனர். கோயில் தக்கார் செல்வி, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், தலைமை கணக்கர் வெங்கடேஷன், ஊழியர்கள் கிருஷ்ணன், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.