பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
போராடும் குணமுள்ள விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் கேது தொடர்ந்து நன்மை தருவார். புதனும் நற்பலன் கொடுப்பார். ஜூன் 24ல் சுக்கிரன் இடம் மாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார்.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். கணவன், மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். பெண்களால் நன்மை கிட்டும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் என்றாலும், ஒரு சிலர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புண்டு. அது மாதிரியான சந்தர்ப்பங்களில் மட்டும் சற்று ஒதுங்கி இருக்கவும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஜூலை 8,9ல் எதிர்பாராத பலனைக் காணலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அவ்வப்போது சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். ஜூலை2,3 தேதிகள் சிறப்பானதாக இருக்கும். கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு எள், கரும்பு, பனை பயிர்கள்மூலம் வருவாய் அதிகம் கிடைக்கும்.பெண்களால் குடும்பம் தழைத்து ஓங்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல்நலம் மாத முற்பகுதியில் சிறப்பாக இருக்கும். பிற்பகுதியில் பித்தம், மயக்கம், உஷ்ணம், சளி தொடர்பான உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 4,7. நிறம்: சிவப்பு, பச்சை.
நல்ல நாட்கள்: 15,16,17,18, 21,22, 25,26, ஜூலை 2,3,4,5,6, 12,13,14,15.
கவன நாட்கள்: ஜூலை 7,8.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களைச் சுற்றுங்கள். செவ்வாய்க்கிழமை விநாயகர், முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.