பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
தவிக்கும் மக்களுக்கு உதவும் குணமுள்ள தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம், குரு,சனி,ராகு ஆகியோரின் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ஜூலை4 வரை செவ்வாய் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. அதே நேரம் குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எதையும் முறியடித்து வெற்றி பெறும் ஆற்றலை அவர் கொடுப்பார். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும் பண விஷயத்தில் செழிப்பாகவே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கணவன்- மனைவி இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பணியாளர்களுக்கு வேலையில் பளுவும் அலைச்சலும் இருக்கும் என்றாலும் குருவின் பார்வையால் வேலையில் திருப்தி காண்பீர்கள். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.புதிய வியாபாரம் அனுகூலம் தரும். பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் ஜூன்24க்கு பிறகு மறையும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். ஜூன் 21,22, 25,26ல் சந்திரனால்தடைகள்வரலாம். கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். புகழ் பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெறலாம். ஜூன்24க்கு பிறகுபணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது. மாணவர்களின் வளர்ச்சி வளர்முகமாக இருக்கும். அதே நேரம் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு பசுக்கள் வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சியை ஜூலை 4க்கு முன்னதாக முடித்து விடவும். அதன் பிறகுஅனுகூலம் இல்லை.பெண்கள் ஆபரணங்கள் வாங்கலாம். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சூரியனால்அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 4,6. நிறம்: மஞ்சள், நீலம்.
நல்ல நாட்கள்: ஜூன் 17,18,19,20, 23,24, 27,28,29, ஜூலை 4,5,6,7,8, 14,15,16
கவன நாட்கள்: ஜூலை 9,10,11.
வழிபாடு:தனுசு: பணச் செழிப்பு ஜூன் 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அதிகாலையில் குளித்து சூரிய வழிபாடு நடத்துங்கள். இதனால் நல்ல முன்னேற்றம் காணலாம்.