பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
துணிவே துணையென நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் முக்கிய கிரகங்கள் பல சாதகமாக காணப்படவில்லை. ஆனால் குருபகவானும், சுக்கிரனும் நன்மை தருவார்கள். புதன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஜூலை10 வரை வக்கிரம் அடைவதால், அவரால் கெடுபலன்கள் நடக்காது. இது தவிர சனியின் 3-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் அதன் மூலமும் நன்மை கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியன்,புதனால் சிலரது பொல்லாப்பைச் சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். குருவால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பெண்களால் உதவி கிட்டும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். இருப்பினும் அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.பணியாளர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். ஜூலை 9,10,11 சிறப்பான நாட்களாக இருக்கும்.வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சில நாட்களில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். கலைஞர்கள் மாத தொடக்கத்தில் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் கணலாம். ஜூன்24க்கு பிறகு, தீவிர முயற்சியின் பேரில் முன்னேற வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் சிரத்தை எடுத்தால் வெற்றி கிட்டும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை காணலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். பெண்கள் உற்சாகமான நிலையை அடைவார்கள். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1,2. நிறம்: மஞ்சள், நீலம்.
நல்ல நாட்கள்: ஜூன் 15,16, 19,20, 24, 30, ஜூலை 1,2,3, 9,10,11,12,13, 16.
கவன நாட்கள்: ஜூலை 4,5,6.
வழிபாடு: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.