பதிவு செய்த நாள்
10
ஜூன்
2013
10:06
காஞ்சிபுரம்: ஸ்ரீவைகுண்டப்பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று, கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானது, வைகுண்டப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீபரமேச்சுர விண்ணகரம், அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுண்டப்பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் உற்சவமான நேற்று, காலை 6:30 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளினார். 6:30 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. வழிநெடுக, ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து, வழிபட்டனர். காலை 7:40 மணிக்கு, தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.