18 கிராம மக்கள் கொண்டாடிய முத்தாலம்மன் கோயில் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2013 10:06
எழுமலை: எழுமலை, இ.பெருமாள்பட்டி, இ.கோட்டைப்பட்டி, தச்சபட்டி, அம்மாபட்டி, ஆத்தாங்கரைப்பட்டி உட்பட 18 கிராம மக்களுக்கு சொந்தமான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, 18 கிராம மக்களும் தனித்தனியாக புனித நீர் எடுத்து வந்தனர். பேரூராட்சி சார்பில் சுகாதார ஏற்பாடுகளும், போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர், நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.