பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் ஆனி விழா கொடியேற்றத்துடன் துவக்கி,13 நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, தயார், ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், நின்ற நாராயணப்பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருளினர். திருத்தங்கல் நகராட்சி தலைவர் தனலட்சுமி கணேச மூர்த்தி, துணைத் தலைவர் சக்திவேல், ஆர்.டி.ஓ., ரங்கன், தாசில்தார் மைக்கேல் ராஜ், இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் தனபால், தர்க்கார் சுவர்ணாம்பாள், கோயில் நிர்வாக அதிகாரி தேவி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணப்பிரியன், முருகேசன், செங்கமலதாயார் சேவா பக்த சபா தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா கோஷமிட்டவாறு, தேரை இழுந்து சென்றனர். கீழ ரதவீதி வழியாக ரதவீதிகளில் உலா வந்த தேர், நிலைக்கு வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.