பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மழை வேண்டி வருண யாகம் நடந்தது. விஜய வருடத்தில் மழை வேண்டி தமிழகத்தில் பிரசித்த பெற்ற சிவாலயங்களில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று காலை நடந்தது. கோவில் பிரம்ம தீர்த்த குள மண்டபத்தில் வெள்ளி கலசம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. மேலும், பர்ஜன்னிய சாந்தி, வருண ஜெப வேள்விகளும் நடந்தன. இதில், கடும் விரதம் மேற்கொண்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். தீர்த்தவாரி மண்டபத்தில், 10,000 ஜெய காயத்திரி ஹோமம் நடந்தது. இதில், திரளான கலந்து கொண்டனர். தொடர்ந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு ஞூபிஷேகம், பூஜை நடந்தது. பின்னர் ஸ்வாமி சன்னதியில் பதிகம் பாடும் நிகழ்ச்சியும், தேவாரம், ஏழாமுறை, ஞானசம்பந்தரின் மேகநாத குறிஞ்சி பாடல்களை ஓதுவார்கள் பாடி இறைவனை வேண்டினர். நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் வீணை இசை கலைஞர்கள் பக்க வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி, கேதாரி ராகங்களை இசைத்து மழை வேண்டி இறைவனை வேண்டினர்.