பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
தேனீ போல் சுறுசுறுப்பாக விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் கேது மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் ஜூலை 30 வரை மிதுனத்தில் நின்று நற்பலன் கொடுப்பார். அதன்பின் அவர் கடகத்திற்கு வந்து நன்மை தரமாட்டார். மேலும், சுக்கிரன் ஜூலை18 வரையும், ஆகஸ்ட்12க்கு பிறகும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற பலனையே கொடுப்பர். குரு,சனியின்7ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆகஸ்ட்1,2ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். உஷ்ண, பித்தம், மயக்கம், வயிறு தொடர்பான உபாதை வரலாம்.பணியாளர்களுக்கு மாத பிற்பகுதியில் சோதனை உண்டு. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆக.8,9ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். ஜூலை30க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஜூலை 18,19,20, ஆகஸ்ட் 15,16ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். ஜூலை 17, 21,22, ஆகஸ்ட்13,14ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூலை30க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். கலைஞர்களுக்கு எதிரிகளால் தொல்லை உண்டு. ஆகஸ்ட்12க்கு பிறகு புதிய ஒப்பந்தங்களால் பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் சீரான பலன்களைப் பெறுவர். விவசாயிகளுக்கு பசு மூலம் வருவாய் உண்டு. பெண்கள் ஜூலை23,24ல் புத்தாடை, நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஜூலை30க்கு பிறகு வேலை பார்க்கும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியிருக்கும்.
நல்ல நாட்கள்: ஜூலை 18,19,20, 23,24, 29,30,31, ஆகஸ்ட்1,2, 8,9,10,11,12 15,16.
கவன நாட்கள்: ஆகஸ்ட்3,4,5 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: சிவப்பு,ஜூலை30 வரை பச்சை.
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.