பதிவு செய்த நாள்
11
பிப்
2026
12:02
நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது வாழ்க்கைக்குரிய பாடங்களையும், படிப்பினைகளையும் நடத்துவார். யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது என்ற கேள்வியை எழுப்பி அதற்குரிய பதிலையும் வழங்குவார். புதிய நட்புகளால் குடும்பத்திற்குள் சங்கடங்களை ஏற்படுத்துவார். கடந்த மாதம் வரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வேலைகளில் பிரச்னைகளை உண்டாக்கி உங்களை அலைக்கழிப்பார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். வீண் செலவு ஏற்படும். நவீன சாதனங்களை வாங்கும் எண்ணம் உண்டாகும். நட்புகளுக்கிடையே விரிசல் தோன்றும். மார்ச் 6 முதல் சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு என்றிருந்த நிலைமாறி நேரடியாக உங்களை எதிர்க்க ஆரம்பிப்பார்கள். உடல்நிலையிலும் பாதிப்புகள் தோன்றும். அலுவலகத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இடைவெளி ஏற்படும். குடும்பத்திற்குள்ளும் எதிர்பாராத குழப்பம் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் பேதலிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்ய வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். மார்ச் 3 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சிரமங்கள் ஏற்படும். ஆடம்பர வழிகளில் சென்று சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலர் சட்ட சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த மாதம் அனைத்திலும் நிதானம், கவனம், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 19.20
அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 25, 28. மார்ச். 1, 7, 10
சொர்ண காளீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
தன்மானத்துடன் வாழ விரும்பும் உங்களுக்கு, மாசி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் மார்ச் 3 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், ராசிநாதன் சூரியனும் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் நிலை ஏற்படும். வேலை காரணமாக ஊரைவிட்டு வேறு ஊரில் குடியேறும் நிலை சிலருக்கு ஏற்படும். தொழிலை மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சியில் கவனம் கூடுதலாக இருக்கும். மார்ச் 6 ல் நடக்கும் சனிப்பெயர்ச்சி உங்கள் நிலையில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்தும். எதிரி தொல்லை அதிகரிக்கும். உடன் இருந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறும் நிலை ஏற்படும். பிப். 21 வரை செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் சொத்து வாங்குவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்து விடுபட முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதன் பிறகு செவ்வாயும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சூரியன், ராகு, செவ்வாய் என உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவர். நட்புகள் வழியே நெருக்கடி தோன்றும். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி ஏற்படும். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் பிரச்னை உருவாகும். பல கிரகங்கள் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் அவசியம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுங்கள். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்பது சங்கடத்தில் இருந்து விடுவிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் மாதத்தின் பிற்பகுதியில் கவனமாக செயல்படவும். தம்பதியர் விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 20, 21
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 19, 24, 28. மார்ச். 1, 6, 10
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
குறிக்கோளுடன் செயல்படும் உங்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம் மாசி. உங்கள் ராசிநாதன் சூரியன் மாதம் முழுதும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்ற இடத்திற்கு வருவீர்கள் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் நட்புகள் வழியே சங்கடத்தை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்குள் வாக்குவாதம், பிரச்னை உண்டாகலாம். அந்நியரால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம் என்பதால் தம்பதியர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரரை அனுசரித்துச் செல்வது அவசியம். பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பதால் சங்கடம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அதன் காரணமாக வேறு இடத்தில் குடியேறும் நிலை ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவர். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக புதியவர்களால் சங்கடம் அதிகரிக்கும். பிப். 20 வரை புதனும் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் உடல் பிரச்னைகளும், எதிர்பார்ப்புகளில் இழுபறியும் ஏற்படும். மார்ச் 6 முதல் சனி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எதையும் யோசித்து செய்வது அவசியம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு கணக்கு வழக்கில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நாள்: பிப். 19, 28. மார்ச். 1, 10
அக்னீஸ்வரரை வழிபட அல்லல் போகும். நன்மை நடக்கும்.