Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: மாசி ராசி பலன் மிதுனம் : மாசி ராசி பலன் மிதுனம் : மாசி ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
ரிஷபம் : மாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : மாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
12:02

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்

எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கிருந்த நெருக்கடி, போராட்டம், பிரச்னைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும்.  தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் உங்கள் தன, குடும்பாதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான புதனும், சுகாதிபதி சூரியனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உண்டாக்குவதால் உங்கள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு பலமுறை முயற்சி செய்தும் கிடைக்காத இடமாற்றம் இப்போது கிடைக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பும், பதவியும் கிடைக்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயம் தரும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நினைத்ததை சாதித்து முடித்திடும் நிலை உண்டாகும். மாணவர்கள் கேளிக்கைக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: மார்ச் 11

அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 19, 24, 28. மார்ச். 1, 6, 10

பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.


ரோகிணி

பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். வேலையில் பிரச்னை, வம்பு, வழக்கு என அவதிப்பட்டு வந்த நிலை மாறும். குற்றம் சுமத்தி பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் தகுதியான இடத்திற்கு மாறுவீர்கள்.  வேலைக்காக முயற்சிப்பவருக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தேவையான பணமும், அரசின் அனுமதியும் கிடைக்கும். வரவு செலவில் இருந்த நெருக்கடி விலகும். மாதத்தின் முதல் வாரத்தில் கையில் பணம் புரளும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மார்ச் 6 முதல் உங்கள் பாக்ய மற்றும் ஜீவனாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். முடங்கிக் கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உங்கள் விரயாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் விவசாயிகள், மருத்துவர்கள், சீருடை பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

சந்திராஷ்டமம்: பிப். 13, 14. மார்ச். 12, 13

அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 20, 24, 29. மார்ச். 2, 6, 11

பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து எடுத்த வேலைகளில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை, தடைகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலையும் சிலருக்கு உண்டாகும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வதற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலையில் இருந்த பயம் போகும். உங்கள் திறமைக்குரிய மதிப்பு ஏற்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழிலை மாற்றம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: பிப். 14. மார்ச். 13, 14

அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 18, 24, 27. மார்ச். 6, 9

பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட விருப்பம் நிறைவேறும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar