Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : தை ராசி பலன் ரிஷபம் : மாசி ராசி பலன் ரிஷபம் : மாசி ராசி பலன்
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மேஷம்: மாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: மாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
12:02

மேஷம்: 


அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட இருந்த தடைகள் விலகும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்ற வார்த்தைக்கேற்ப உங்கள் முயற்சி யாவும் லாபம் தரும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலரது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிப். 22 முதல் ராசியாதிபதியும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் வளர்ச்சி அடையும். செய்துவரும் தொழில் எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்கும். சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: மார்ச். 9, 10

அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 18, 25, 27. மார்ச். 7

பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


பரணி

நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை அதற்காக உழைக்கும் உங்களுக்கு மாசி மாதம் மகிழ்ச்சியான மாதம். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் கூடும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ராசிநாதன் பிப். 22 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு, செலவில் இருந்த நெருக்கடி விலகும். தொடர்ந்து ஏதாகிலும் ஒரு வகையில் செலவுகளையே பார்த்து வந்த உங்களுக்கு  லாபத்தை பார்த்திடக்கூடிய நிலை உண்டாகும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும் கலைஞர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வருபவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். வேலையில் நிம்மதி இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து வாகனம் என்று வாங்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். அவர்களுடைய எதிர்காலத்திற்குரிய வழிகளை உருவாக்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மார்ச் 6 முதல் தொழில்காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் நிதானம் வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். உடல்நலனில் அக்கறை தேவை. பிப். 20 முதல் புதன் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கமிஷன் ஏஜன்சி, ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டிருப்போர் சூழல் அறிந்து செயல்படுவது அவசியம்.

சந்திராஷ்டமம்: மார்ச் 10, 11

அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 18, 24, 27. மார்ச். 6, 9

பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.


கார்த்திகை 1 ம் பாதம்

முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் இருளில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு அழைத்து வருவார். சங்கடம் சச்சரவு போராட்டம் என்றிருந்த நிலை மாறும். கையில் பணம் புழங்கும். செல்வாக்கு கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கூடும். சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். மார்ச். 6 வரை லாப சனி உங்களைத் தலைநிமிர்ந்து வாழ வைப்பார். அதன்பி றகு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் யோகக்காரகன் ராகு தொடர்ந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவிற்குத் தேவையான வருமானம் தொடர்ந்து வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசின் அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபம் தரும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். பிப். 22 முதல் ராசி நாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் சொத்து சேரும். காவல்துறை, ராணுவம், மீட்புப்பணி துறையினருக்கு மரியாதை அதிகரிக்கும். மருத்துவத் துறையினருக்கு மதிப்பு உண்டாகும். பிப். 20 முதல் புதன் வக்கிரம் அடைவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்கு யோசிப்பது நல்லது.  பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. என்றாலும் லாப ஸ்தான பலம் அடைவதால் செல்வம் செழிப்படையும். புதிய பொருட்கள் சேரும் கையிருப்பு கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

சந்திராஷ்டமம்: மார்ச் 11

அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 19, 27, 28. மார்ச் 1, 9, 10

பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்அறிவு, ஆற்றலால் வெற்றி பெறும் உங்களுக்கு மாசி யோகமான மாதமாகும். சத்ரு ஜெய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar