Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : மாசி ராசி பலன் கடகம் : மாசி ராசி பலன் கடகம் : மாசி ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மிதுனம் : மாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மிதுனம் : மாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
12:02

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்

மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் புதன் என்ற சஞ்சார நிலைகள் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். மார்ச் 6 வரை சனிபகவான் உங்கள் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பெரியோரின் துணையும், தெய்வ அருளும் கிடைக்கும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் நீங்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் மார்ச் 3 வரை அபரிமிதமான வருமானத்தை வழங்குவார். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மிக கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும், கையில் எடுத்துச் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. வயதானவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதும் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் அவசியம். 

சந்திராஷ்டமம்: பிப். 15. மார்ச் 14

அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 18, 23, 27. மார்ச் 5, 9

பரிகாரம் விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


திருவாதிரை

நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் போட்டிப் போட்டுக்கொண்டு உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்கள். வரவேண்டிய பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றி அளிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். சகோதரர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், ஒவ்வொரு வேலையிலும் உங்களுடைய மேற்பார்வை இருப்பது நன்மையை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆலோசித்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது மேலும் நன்மையாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு அரசு ரீதியாக ஏற்பட்ட பிரச்சனைகள் சங்கடங்கள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பிப். 20 முதல் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்கள் படிப்பில்  கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: பிப். 15, 16.

அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 14, 22, 23, மார்ச். 4, 5, 13, 14.

பரிகாரம் திருவாலங்காடு காளியை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.


புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்

சுயமாக சிந்தித்து செயல்படும் உங்களுக்கு, மாசி நன்மையான மாதம். ராசிக்குள் குரு வக்கிரமாக சஞ்சரித்தாலும் பாக்ய ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனும், யோகக்காரகன் ராகுவும், மார்ச் 6 வரை சனி பகவானும் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்காலத்தை மனதில் நினைத்து செயல்படுவீர்கள். குடும்பம், தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். புதிய முயற்சிகள் வெற்றியாகும். மார்ச் 3 வரை சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். கையில் பணம் புரளும். பிறருக்கு உதவக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும்.  தொழில் முன்னேற்றம் அடையும். முடங்கிக் கிடந்த தொழில்களும் லாபம் தரும். 

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் எந்தவொரு வேலையாக இருந்தாலும் நீங்களே செய்வது நன்மையை ஏற்படுத்தும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு வேலையில் நிம்மதி இருக்கும். முதலாளியின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: பிப். 16, 17

அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச் 3, 5, 12, 14

பரிகாரம் வியாழன் அன்று குருபகவானை வழிபட  நன்மை உண்டாகும். 

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar