பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
10:07
சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலில், முதல் கால யாக சாலை பூஜை நேற்று துவங்கியது. சேலம் சின்னகடை வீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவிலில், ஜூலை, 15ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக, கோவிலில், பல்வேறு பூஜை, ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், யாகசாலை அமைத்து பூஜை செய்வதற்காக, 200 அடிக்கும் மேல் நீளமான பந்தல் போடப்பட்டுள்ளது. நேற்று காலை, 8 மணிக்கு, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து, அமண்டூக தீர்த்தம் மற்றும் நதி தீர்த்தம் அர்ச்சகர்கள் மூலம், ராஜகணபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு, ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், அக்னி ஸங்க்ரஹணம், ப்ரஸன்னாபிஷேகம், ப்ரஸன்னார்ச்சனை ஆகியவை நடந்தது. பிறகு, விசே சந்தி, ஸோம கும்ப பூஜை, சூர்ய பூஜை, யாகசாலை பரிவார பூஜை, கும்பாலங்காரம் செய்யப்பட்டது. பிறகு, முதல் கால யாகசாலை பூஜை செய்து, ஹோமம் வளர்க்கப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இன்று, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.