பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் பொருள் தெரியுமா? யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார்கள். அப்போது, உங்களுக்கு உதவ முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. "இப்போது என்னிடம் எதுவுமில்லை, கிடைத்ததும் தர முயற்சிக்கிறேன் என பண்போடு சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான். தானம் விஷயத்தில் இன்னொன்றையும் மறந்து விடாதீர்கள். தானம் கொடுக்கும்போது, ""பார்த்தாயா! என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள், என்று பெருமை பேசக்கூடாது. அதுபோல், ""நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதீங்க. எனக்கு சாதகமாகத் தான் நீங்க இருக்கணும், என்று நிர்பந்திப்பதும் கூடாது. அதாவது, தர்மத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், அதைச் செய்ததன் பலனை அடைய முடியாது.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26