பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை 23) மாலை பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த வாரம் ஆடி திருவிழா துவங்கியது. தினமும், கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.நேற்று (ஜூலை 23) மாலை, 6 மணிக்கு ஆடித் திருவிழாவை முன்னிட்டு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பூச்சாட்டிய பின், அந்த பூக்கள், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, குகை, அன்னதானப்பட்டி உள்ளிட்ட, எட்டு இடங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.அங்கு, பூசாரிகள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூச்சாட்டப்பட்டது.