பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
02:07
*மனதில் ஆசை அதிகமாகும் போது, அமைதி குறையத் தொடங்கும். அமைதியான மனதில் ஆசைக்கு இடம் இருப்பதில்லை. ஆசையும், அமைதியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
*எண்ணத்தை பொறுத்தே மனிதவாழ்வு அமையும்.அதனால், உயர்ந்தவிஷயங்களில் மனதைஈடுபடுத்த வேண்டியதுஅவசியம்.
*இளமை முதலே தெய்வ நம்பிக்கை, ஒழுக்கம், தொண்டு, தியாகம் போன்றவற்றைகடைபிடித்து வந்தால்அமைதிக்கு ஊறுவிளைவதில்லை.
*இன்றைய இளைஞர்கள் ஆடம்பர பொருட்களைஅத்தியாவசியமாககருதுகிறார்கள். இதன் மூலம் தேவை அதிகமாகிமனநிம்மதியை இழக்கின்றனர்.
*மனம் போன போக்கில் வாழாமல் அதை தீமையிலிருந்து விலக்கி கட்டுப்படுத்துவதோடு நன்மையில் செலுத்துவதேஅறிவுடைமை.
*இறைவன் பக்தனின்இதயத்தைப் பார்க்கிறானோ தவிர, பணம், பதவி, பட்டம், மதம், ஜாதியை ஒருபோதும் பார்ப்பதில்லை.
*பிறப்பினால் யாருக்கும் பெருமை உண்டாவதில்லை. மாறாக, நற்செயல்களால் மட்டுமே ஒருவருக்கு பெருமை ஏற்படுகிறது.
*பக்குவம் வந்த பின்னரே காய் கனியாக மாறும்.அதுபோல, நம் பக்குவத்திற்கு ஏற்பவே, இறைவனும் அருளை நம்மீது பொழிகிறான்.
*கன்றை நோக்கி ஓடிவரும் தாய்ப்பசு போல, முயற்சி உடையவனை நோக்கி வெற்றித் திருமகள்ஓடிவருகிறாள்.
*பாடினால் தான் குயில். பாடுபட்டால் தான் மனிதர் என்கிறார் அறிஞர் ஒருவர். முயற்சியில்லாமல் சோம்பித்திரிபவன் மீது வறுமை சவாரி செய்யும்.
*முயற்சியுடையவருக்கே வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். முழுமையாக முயற்சித்தாலும் இறையருள் இல்லாமல் வெற்றிஉண்டாவதில்லை.
*ஆன்மிக வாழ்வு என்பது சிறந்தமுறையில் செய்யப்படும் விவசாயம் போன்றது. பண்பட்ட மனதில் தான்இறையருள் என்னும் விளைச்சல் உண்டாகும்.
*சலனப்படுவது மனதின் இயல்பு. உறுதியும்,வைராக்கியமும் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.
*உறுதியற்ற உள்ளம்இருளடைந்த வீடு போன்றது. அந்த வீட்டில் காம, குரோத, பொறாமை எண்ணங்கள் மட்டுமே குடியிருக்கமுடியும்.
*உறுதியற்றஉள்ளம்கொண்டமனிதன்விழித்திருக்கும்நேரத்தில்கண்டதையும்சிந்தித்துஏங்கித்தவிக்கிறான்.இல்லாவிட்டால்தன்னை மறந்துதூங்குகிறான். இப்படி வாழ்வு நடத்தினால் என்ன சாதிக்க முடியும்?
*மனம் உறுதி பெற வேண்டுமானால் அறநெறிகளைப் பின்பற்றி ஒழுக்கமுடன் வாழவேண்டும்.
*பிறர் குற்றத்தை பொறுத்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான செயல் அல்ல. இந்த விஷயத்தில் வெற்றி பெற தொடர்முயற்சி தேவை.
*உலகம் ஒரு பள்ளிக்கூடம். நாள்தோறும் அது பலவிதமான படிப்பினைகளை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
*மேடுபள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கை. அதில் யாருக்கும் வெற்றி மட்டுமோ, தோல்வி மட்டுமோஉண்டாவதில்லை. இரண்டும் கலந்தே அமைகிறது.
-கமலாத்மானந்தர்