ஆடிவெள்ளி பழநிகோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2013 10:07
பழநி:ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன், மாரியம்மன், திருஆவினன்குடி ஆகிய கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி, லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நூறாயிரம் மலர் தூவி அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாரியம்மன் கோயிலிலும் காலை,மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பழையதாராபுரம் ரோட்டிலுள்ள ரெணகாளியம்மன் கோயில், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில் ஆகிய கோயில்களில் பெண்கள் நெய்தீபம் ஏற்றினர். *திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்கோயிலில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.