பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
ஸ்ரீபெரும்புதூர்: கீரநல்லூர் பழண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்த, கீரநல்லூர் கிராமத்தில், 150 ஆண்டுகள் பழமையான, பழண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி நிறைவு பெற்று, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 26ம் தேதி, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேகப் பணி துவங்கியது. நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, இரண்டாவது கால யாக பூஜையும், மாலை 3:00 மணிக்கு, மூன்றாவது கால யாக பூஜையும் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, நான்காவது கால யாக பூஜை, 8:00 மணிக்கு, கடம் புறப்பாடு நடைப்பெற்ற பின், 9:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.