பதிவு செய்த நாள்
03
ஆக
2013
10:08
புதுச்சேரி :ஐயன்குட்டிப்பாளையம் ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு நிலம் ஒப்படைக்கும் விழா நடந்தது.ஐயன்குட்டிப்பாளையம் ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவிலில், கடந்த 29ம் தேதி திருவிழா துவங்கியது.ஆக 2 முன்தினம் இரவு அம்மனுக்கு ஸ்ரீ பகவதி அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், சப்தகிரி குழுமத்தை சேர்ந்த சிவக்கொழுந்து சார்பில், ஐயன்குட்டிப்பாளையத்தில் உள்ள 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,400 சதுர அடி நிலத்தை தானமாக, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. காங்., மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் சார்பில், கோவில் சகடி அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் மற்றும், 25 மூட்டை அரிசி நன்கொடையாக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல். ஏ.,க்கள் நமச்சிவாயம், தமிழ்ச்செல்வன், சப்தகிரி சிவக்கொழுந்து, ராமலிங்கம், மாநில காங்., பொதுச் செயலாளர் ஆறுமுகம், இந்திரா நகர் வட்டார காங்., தலைவர் கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.