சென்னை : ஆடிப்பூர விழாவையொட்டி, வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட, 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள், மேல்மருவத்தூரில் நின்று செல்லும். சென்னை, எழும்பூரிலிருந்து இயக்கப்படும், ராக்போர்ட், வைகை, பொதிகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இருவழி மார்க்கத்திலும், நாளையிலிருந்து (7ம் தேதி) வரும், 9ம் தேதி வரை மேல்மருவத்தூர் நிலையத்தில் நின்று செல்லும்.