பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
குருவை ஆட்சி நாயகனாக கொண்ட மீன ராசி அன்பர்களே!
குரு 4-ம் இடத்தில் இருந்தாலும், உங்கள் ராசி நாதன் என்பதால் கெடுபலன் உண்டாகாது. ராசிக்கு 6ல் சூரியன் வாழ்வில் எல்லா வகையிலும் முன்னேற்றம் தருவார். பகைவரை வெல்லும் ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் கூடும். பணியில் மதிப்பு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சூரியனோடு கல்விகாரகன் புதன் இணைந்து இருப்பது சிறப்பு. புதனால், எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.புதன் செப்.3ல், 7-ம் இடமான கன்னிக்குச் செல்கிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரச்னையும், மனக்குழப்பமும் ஏற்படலாம்.சுக்கிரன் 7ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். இவர், செப்.8ல் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் மூலம் நன்மைகள் தருவார். வீட்டில் வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அதோடு பார்வையாலும் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.பூமிகாரகன் செவ்வாய் ஆகஸ்ட்20ல் கடகத்திற்கு இடம் மாறுவதால் எதிரி தொல்லை உருவாகலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஆனால், 7ம் இடத்துப்பார்வையால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி, ராகு சாதகமாக இல்லை என்றாலும், அவர்கள் மீது குரு பார்வை படுவதால் அவர்கள் உங்களுக்கு கெடுபலனைத் தரமாட்டார்கள். விரைவாக சுழலும் கிரகங்களால் இந்த மாதம் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் அதிக முயற்சியின் பேரில் கிடைக்கும். செப்.8க்குப் பிறகு நிலைமை சீராகி பணம் வரும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17,18,19,20,23,24,25,29,செப்.4, 5,6,7,8,13,14,15,16
கவன நாட்கள்: செப்.9,10
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: பச்சை, சிவப்பு
வழிபாடு: முருகன், துர்க்கையை வழிபடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.