பதிவு செய்த நாள்
16
அக்
2025
04:10
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்;
எடுத்த வேலையை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். செவ்வாய் அக். 27 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளிடையே பிரச்னை தலையெடுக்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் இழுபறி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரும். அக். 27 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் குரு பார்வையுடன் செவ்வாய் சந்திப்பதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். வம்பு வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அனைத்திலும் முன்னேற்றமான நிலை உண்டாகும். விவசாயம், மருத்துவம், உணவகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். காவல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும். பெரிய மனிதருடைய ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: அக். 28, 29
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 23, 27. நவ. 5, 9, 14
பரிகாரம் பழநி முருகனை வழிபட சங்கடங்கள் விலகும்.
திருவாதிரை: வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் யோகம் கொண்ட உங்களுக்கு, ஐப்பசி அதிர்ஷ்டமான மாதமாகும். ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். நீண்ட நாள் கனவு நனவாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரத்தில் தடை, நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும். தன புத்திர காரகன் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வரவேண்டிய பணம் வரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். போட்டியாளர்கள் உங்களிடம் வந்து சரணடையும் நிலை ஏற்படும். உங்கள் லாபாதிபதி அக். 27 முதல் குருபார்வையுடன் சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் ஏற்பட்டு முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: அக். 29, 30.
அதிர்ஷ்ட நாள்: அக். 22, 23, 31. நவ. 4, 5, 13, 14.
பரிகாரம் பண்ணாரி அம்மணை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலும் செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி யோகமான மாதமாகும். ஞானக் காரகன் குரு 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சி சாதகமாகும். ஞான மோட்சக்காரகன் கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தயக்கம், தடுமாற்றம், சோம்பல் என்றிருந்த நிலை மாறும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர்கள் ஆதரவு உண்டாகும். விற்பனை உயரும். லாபம் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களைப் பற்றி பிறர் அவதுாறு பேசும் நிலை ஏற்படும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை வேண்டும். நவ.3 முதல் அதிர்ஷ்டக் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டு நீதிமன்ற வாசலில் நிற்பவர்களும் பெரியோர்களின் ஆலோசனையின்படி இணைந்து வாழும் நிலை உண்டாகும். பாக்கிய ஸ்தான ராகுவால் வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அருள் உண்டாகும். எடுக்கும் வேலைகள் தடையின்றி நடந்தேறும். ஆனால் உடன் பணிபுரிவோரிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பெண்களின் சாமர்த்தியம் வெளிப்படும். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, நவ. 3, 5, 12, 14.
பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட விருப்பம் நிறைவேறும்.