பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
சனீஸ்வரரை ஆட்சி நாயகனாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
தற்போது சனி உச்சத்தில் இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இல்லை. ஆனால் அவரது 3, 7, 10ம் பார்வைகள் சாதகமாக இருப்பதால் நன்மையை வழங்குவார். குருவும் 5-ம் இடத்தில் நின்று சுப வாழ்வை அளிக்கிறார். கேது 3-ம் இடத்தில் நின்று பொருளாதார வளம் தருகிறார். ராகு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் குருவின் பார்வை ஏற்படுவதால் கெடுபலன் நேராது. பல கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சந்தோஷ வாழ்வு அமையும். சூரியனை பொறுத்த வரை இந்த மாதம் நன்மை கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதை உருவாகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்கி மகிழ்வீர்கள். புதன் தற்போது 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். அதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். ஆனால் செப்.3ல் கன்னிக்குச் சென்றபின், குடும்ப பிரச்னை தீரும். முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் 8-ம் இடத்தில் இருப்பதால் வீட்டில் வசதி பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.செப்.8ல் சுக்கிரன் 9-ம் இடத்துக்கு மாறிச் சென்றாலும் நன்மை தொடரும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அவரது பார்வையால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். முக்கிய கிரகங்களில் கேது சாதகமான இடத்தில் இருந்து நன்மையைத் தந்து கொண்டிருக்கிறார். கடவுளின் அருள் கிடைக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். பொருளாதார வளம் மேம்படும். கலைஞர்கள் நல்வாழ்வு பெறுவதோடு, தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் நன்கு படித்து சிறப்பான நிலையை அடைவர்.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17,18,21,22,26,27,செப்.2,3,5, 6,11,12,13,14
கவன நாட்கள்: செப்.7,8
அதிர்ஷ்ட எண்: 2,3,5 நிறம்: சிவப்பு, மஞ்சள்
வழிபாடு: சூரியன், சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள்.