புனர்பூசம் 4 ம் பாதம்: தெளிந்த அறிவும் சுய சிந்தனையும் கொண்டு வெற்றி காணும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகன் குரு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். குரு பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் அரும்பும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலர் மணமேடையிலும் ஏறுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவர், மனைவிக்குள் நிலவிய சச்சரவு நீங்கும். பெரிய மனிதரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். ஐப்பசி மாதத்தில் ஒரு பக்கம் உங்களுக்கு அலைச்சல் இருந்தாலும் மறுபக்கம் நன்மைக்குரிய நிலையும் இருக்கிறது. பணியாளர்களின் செல்வாக்கும், திறமையும் வெளிப்படும். எதிர்ப்பு மறையும். உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையுண்டாகும்.
பரிகாரம் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
பூசம்: நிதானமாகவும் உறுதியாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்திருந்தாலும் அவருடைய காரகத்துவம் கொண்ட ராகு அங்கே சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம், பிரச்னை ஏற்படும். சிலர் அவமானத்தை சந்திக்க நேரும். உடல் நிலையில் பாதிப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். செவ்வாய் சுக ஸ்தானத்திலும் அக். 27 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். நேரத்திற்கு உறங்க முடியாமலும் சாப்பிட முடியாமலும் போகும். ஜென்ம குருவால் அலைச்சலை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏதேனும் சங்கடம் வந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் புதன் அக். 27 வரை உங்களின் முயற்சிகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்ட பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சுபிட்சத்தை வழங்குவார். குடும்பத்தில் குழப்பம் மறையும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேச்சில் நிதானமும், பண விஷயத்தில் கவனமும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். உழைப்பாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவானாலும், குருப்பார்வை சாதகமாக இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கும் நிலை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக். 31. நவ. 1.
அதிர்ஷ்ட நாள்: அக். 17, 20, 26, 29. நவ. 2, 8, 11.
பரிகாரம் திருநள்ளாறு சிவனை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.
ஆயில்யம்; புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஐப்பசி நன்மையான மாதமாகும். வித்யாகாரகன் புதன் அக். 27 வரை சாதகமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பணியில் எதிர்பார்த்த உயர்வும், மாற்றமும் கிடைக்கும். எப்படி உழைத்தாலும் முன்னேற்றம் இல்லை என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர். தாய்மாமன், மாமனார் வகையில் தேவையான உதவி கிடைக்கும். உடல் பாதிப்புகள் விலகும். எதிரிகள் வழியாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். ஆனால் யோகக்காரகன் ராகு எட்டாம் இடத்திலும், ஞான மோட்சக்காரகன் கேது இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். செவ்வாயின் சஞ்சாரமும் அக். 27 வரை சுகஸ்தானத்தில் இருப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அக். 27 முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் விளைச்சலில் லாபம் காண முடியும். மாணவர்களுக்கு படிப்பின் மீதிருந்த அலட்சியம் மறையும்.
சந்திராஷ்டமம்: நவ.1, 2.
அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 5, 11, 14.
பரிகாரம் சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »