பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
எதையும் செம்மையாய் செய்து முடிக்கும் மேஷராசி அன்பர்களே!
கடந்த மாதத்தைவிட முன்னேற்றம் காணலாம். கடந்த மாதம் சூரியன் ஆட்சி பெற்று இருந்தாலும் உங்களுக்கு நன்மை தரவில்லை. ஆனால், இந்த மாதம் அவர் 6ம் இடமான கன்னிக்கு வந்து நன்மை தருவார். பகைவர்களை எளிதில் வெற்றி கொள்வீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். செய்யும் பணியில் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். புதன், சூரியனோடு இணைந்து கன்னியில் ஆட்சி பெற்று இருக்கிறார். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு மேம்படும். ஆனால், செப்.23ல் புதன் இடமாறி துலாமிற்கு வருவது சிறப்பான இடம் அல்ல. அவரால் குடும்பத்தில் சிறு குழப்பம் வரலாம். சுக்கிரன் துலாமில் ஆட்சி பெற்று இருக்கிறார். ஆனால், அங்கிருந்து நன்மைதர இயலாது. பெண்கள்வகையில் தொல்லை வரலாம். சுக்கிரன் புரட்டாசி 18ல் விருச்சிகத்திற்கு சென்று நன்மை தருவார். வீட்டில் வசதிகள் பெருகும். குடும்பத்தில் குழப்பம் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். பெண்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.உங்கள் ராசிநாயகன் செவ்வாய் கடகத்தில் இருப்பது சாதகமான இடம் அல்ல. அதே நேரம் அவர் அங்கு நீச்சம் பெற்று இருப்பதால் கெடுபலன் தரமாட்டார். ஆனாலும், தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம். தெரியாத நபரிடம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். உடல் நலனிலும் சற்று அக்கறை தேவை. அக்டோபர் 8க்கு பிறகு உடல்நலத்தில் தீவிர கவனம் வேண்டும். பயணத்தின் போதும் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவேண்டியது இருக்கும்.முக்கிய கிரகங்களான சனியும், ராகுவும் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவர்கள் மீது குருவின்பார்வை தொடர்ந்து விழுந்து கொண்டிருப்பதால் அவர்களால் கெடுபலன்கள் நடக்காது.
நல்ல நாட்கள்:செப்.17,18,19,22,23,27,28,அக்.4,5,6,7, 13,14,1 5,16
கவன நாட்கள்: அக்.8,9,10
அதிர்ஷ்ட எண்கள்: 1,9, நிறம்: வெள்ளை, செந்தூரம்
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோயில்களில் தரிசனம் செய்யலாம். மகான்களை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.