பதிவு செய்த நாள்
16
அக்
2025
04:10
மகம்; என்ன நடந்தாலும் அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். இதுநாள் வரை நீங்கள் யாரையெல்லாம் பெரிதாக நம்பி வந்தீர்களோ அவர்களின் சுயரூபம் இந்த நேரத்தில் தெரிய வரும். உங்கள் லாபாதிபதியும் தனாதிபதியுமான புதனும் இந்த மாதத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறார். இருந்தாலும் ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அசாத்தியமான துணிச்சல் உங்களுக்கு ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் எல்லாம் நடந்தேறும். தடைபட்ட முயற்சிகள் வெற்றியாகும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முடிவு வரும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவர். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். தலைமையின் பார்வை படும். உங்கள் பாக்கியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும். புதிய சொத்து வாங்கும் நிலை சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 25, 28. நவ. 1, 7, 10, 16.
பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட நன்மை நடந்தேறும்.
பூரம்; எப்போதும் முதலிடத்தில் இருந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி யோகமான மாதமாகும். உங்கள் பாக்கியாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகி இணக்கம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கடந்த கால நெருக்கடி விலகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வராமல் இருந்த பணம் வரும். பூமிக்காரகன் செவ்வாய் அக்.27 வரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அரசு பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஐப்பசி அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 4, 6, 8 ம் இடங்களைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உடல் பாதிப்பு விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சந்தர்ப்ப சூழலால் அமைதியாக இருந்த நிலை மாறும். ராசிநாதனும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நினைப்பது நடந்தேறும். பயம் மறையும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் தொடங்க அனுமதி கிடைக்கும். ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 24, 28. நவ. 1, 6, 10, 15.
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட பொருளாதாரம் உயரும். நன்மை நடக்கும்.
உத்திரம்; சூரியனைப் போல பிரகாசிக்கும் உங்களுக்கு ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் இந்த மாதம் விலகும். ராசிநாதன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களை ஏளனமாக பார்த்தவர்களும் உயர்வாக பார்த்திடும் நிலை உருவாகும். எடுக்கும் வேலைகள் லாபம் தரும். இழுபறியாக இந்த வேலைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அக். 27 வரை மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்கள் வேலைகளை லாபமாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். துணிச்சலாக செயல்பட வைப்பார். வியாபாரத்தில் தடைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிக்கு அனுமதி கிடைக்கும். சப்தம ஸ்தான ராகு, நண்பர்களின் வழியே பிரச்னைகளை உண்டாக்குவார். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனமாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் விரய குருவின் பார்வைகள் சத்ரு ஜெயஸ்தானத்தில்
ற்கு உண்டாவதால் எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு சாதகமாகும். புதிய வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 28. நவ. 1, 10.
பரிகாரம் அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் மறையும்.