பதிவு செய்த நாள்
16
அக்
2025
03:10
வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது குடும்பத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகளை உண்டாக்குவார். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்துவார். புதிய நட்புகளால் குடும்பத்திற்குள் குழப்பத்தை உருவாக்குவார். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு, உங்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்பை வழங்குவார். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணி, இடமாற்றம் ஏற்படும். சிலர் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். சொந்த வீட்டில் குடியேறும் நிலை சிலருக்கு ஏற்படும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீண் செலவு, விரயம் குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட பின்னடைவு விலகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: அக். 23, 24.
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 25, 27, நவ. 7, 9, 16.
பரிகாரம்: நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
பரணி; நினைத்ததை சாதிக்கும் திறமையும், யோகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் நவ.3 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்றாகப் பழகியவர்களுடனும் எதிர்ப்பு உண்டாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். உடல் நிலையில் சின்னச் சின்ன பாதிப்பு வந்து போகும். நவ. 3 முதல் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். தொழிலின் மீதான கவனம் குறையும். சிலருக்கு குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 8, 10, 12 ம் இடங்களையும் பார்ப்பதால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். நீண்டநாள் கனவு நனவாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடக்கவில்லை, வாழ்க்கையில் நிம்மதியில்லை என்ற நிலை மாறும். நிம்மதியான உறக்கமும் மனதில் தெளிவும் ஏற்படும். லாப ஸ்தான ராகு பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயத்தை ஏற்படுத்துவார். கலைஞர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: அக். 24, 25
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 27, நவ. 6, 9, 15
பரிகாரம்: ஐயாவாடி பிரத்தியங்கிராவை வழிபட நல்லதே நடக்கும்.
கார்த்திகை 1 ம் பாதம்; எந்த நிலையிலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி புதிய பாதையில் நடை போடும் மாதமாக இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பணியாளர்களுக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலருக்கு வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை உண்டாகும். ராசிநாதன் மாதம் முழுவதும் சப்தமம், அஷ்டம ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் மனதிற்குள் ஒரு பதட்டம் இருக்கும். வீண் பயம் ஏற்படும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நெருக்கடி இல்லாமல் போகும். எந்தவித பிரச்னை வந்தாலும் அது வந்த வழி தெரியாமல் விலகிச் செல்லும். தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மணமுறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமண வாய்ப்பு உருவாகும். அக் 27 முதல் புதன் வக்கிரம் அடைவதால், கடன் வாங்கும் போதும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் முழுமையாக படித்துப் பார்ப்பது நல்லது. பங்குச்சந்தை விவகாரம் எதிர்மறை பலனை ஏற்படுத்தும். நிதானமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். பிள்ளைகள் வழியே செலவு அதிகரிக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும்.
அதிர்ஷ்ட நாள்: அக். 18, 19, 27, 28, நவ. 1, 9, 10
பரிகாரம்: சிவபெருமானை வழிபட நன்மை நடக்கும்.