பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
சிதம்பரம்:சுதந்திர தினத்தையொட்டி, நடராஜர் கோவில் கிழக்குக் கோபுரத்தில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது.கடலூர் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வெள்ளித்தட்டில் தேசியக் கொடியை வைத்து, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சன்னிதியில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர்.பின், தேசியக் கொடியை, மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கிழக்குக் கோபுர வாசலில் பூஜை செய்தனர். கிழக்குக் கோபுரத்தில், காலை, 8:00 மணிக்கு, தேசியக் கொடி ஏற்றி, வீர வணக்கம் செலுத்தினர்.