பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
பழநி: பழநி சன்னதி வீதியிலுள்ள வேளீஸ்வரர் சிவன் கோயிலில், திருப்பணிக்காக சுற்றுச்சுவர் பகுதியில் குழிதோண்டியபோது, 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பழநி தேவஸ்தானத்தை சேர்ந்த,வேளீஸ்வரர் கோயிலில், புதிய மண்டபம் கட்டுதல், மராமத்து பணிகள் நடக்கிறது. ஆக, 23 சுற்றுச்சுவர் அருகே வானம்தோண்டியபோது, 3 அடி உயர பார்வதி சிலை, அதன் அருகில் விநாயகர், நாகர், சண்டிகேஸ்வரர், பலிபீடம், நந்தி போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தொல்லியியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறுகையில், ""வேளீஸ்வரர் கோயிலில் கிடைத்துள்ள கற்சிலைகள் மிகவும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி சிலையில் சிவனின் முத்திரை காணப்படுகிறது. 16 ம் நூற்றாண்டில், இத்தகைய வடிவமைப்பு முறை இருந்துள்ளது, என்றார்.