Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவி­நா­சி­யப்பர் கோவில் கால்கோள் ... கண்­ணாடி அறையில் வீர­ரா­கவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவில்.. கையகப்படுத்துவதை கைவிட்டது தொல்லியல்துறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 செப்
2013
10:09

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலை, தேசிய சின்னமாக அறிவித்து கையகப்படுத்தும், இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை, அரசியல் தலையீடுகளால் கைவிடப்பட்டது, சமூக ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவில், 108 வைணவத் தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இக்கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ராமர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. பழங்காலத்தில், இவ்வூர் திருக்கடல் மல்லையாக விளங்கியபோது, இறைவனை தரிசிக்க தவமிருந்த, புண்டரீக முனிவருக்கு, இறைவன் காட்சியளித்து, இங்கு கோவில் உருவானது என்பது ஸ்தல வரலாறு. இறைவன் பெருமாள், தரையில் படுத்து காட்சியளித்ததால், ஸ்தலசயனப்பெருமாள் (தலம் - தரை, சயனம் - படுத்தல்) என அழைக்கப்படுகிறார். திருமங்கையாழ்வார், 20 பாசுரங்களில், இத்தலத்தை போற்றி பாடியுள்ளார். ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த, ராஜசிம்ம வர்ம பல்லவன், கடற்கரையில் பாறை கற்களில் கோவில் அமைத்து, வழிபாடு நடத்தினான். அதைத் தொடர்ந்து, விஜயநகர ஆட்சியின் போது, கிருஷ்ணராஜ தேவராயர், கடற்கரைக்கோவில், நாளடைவில் கடலால் பாதிக்கலாம் எனக் கருதி, நகரின் மைய பகுதியில், புதிய கோவிலை கட்டினார். இக்கோவிலை, இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. ஆனால், கோவில் வளாக சீர்கேடுகள், கோவில் அருகில் உள்ள பாரம்பரிய சின்ன பகுதிகளையும் சீரழிக்கிறது. கோவில் அருகில், கிருஷ்ண மண்டபம், அர்ச்சுணன் தபசு ஆகிய பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. இந்திய தொல்லியல் துறை, இவற்றை பராமரித்துவரும் நிலையில், அறநிலையத்துறை கோவில் வளாகம், பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. கோவில் வளாகத்தில், பொதுமக்கள் சிறுநீர் கழிக்கின்றனர்; மது அருந்துகின்றனர்; சுற்றுலா பயணிகள் குப்பை போடுகின்றனர். இத்தகைய அவலத்தால், அர்ச்சுணன் தபசு சிற்பத்தை காண வரும் சுற்றுலா பயணிகள், அருவெறுப்படைகின்றனர். எனவே, தொல்லியல் துறை, கோவிலை கையகப்படுத்த முடிவெடுத்து, 2004ல், அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. பொதுமக்கள் கருத்தறியாமல் முடிவெடுத்ததாக, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளால், கையகப்படுத்துவது தாமதமானது.

இதற்கிடையே, கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்து, கையகப்படுத்த, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆண்டு, மே, 20ம் தேதி, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்திய அரசிதழில் வெளியிட்ட முன்னறிவிப்பு மற்றும் வழக்குகள் தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாமல்லபுரம் மற்றும் சுற்றுபுற பகுதி பொதுமக்கள், தொல்லியல்துறை நடவடிக்கை குறித்து, சென்னை வட்ட தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம், எழுத்து மூலமாக தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டது. பொதுமக்களில் பெரும்பாலோர், கோவில் புனிதம், பாரம்பரிய பகுதி தூய்மை கருதி, இம்முடிவை வரவேற்றனர். இந்நிலையில், தொல்லியல்துறை நடவடிக்கையால், கோவில் சுற்றுபுற பகுதி மக்கள் பாதிக்கப்படுவர் என, ஒரு சுயநல கும்பல், மக்களை திசை திருப்பியது. அதாவது, பாரம்பரிய பகுதி அருகில், 100 மீ., தொலைவிற்குள், கட்டடங்கள் அமையக் கூடாது என்பது தொல்லியல்துறை விதி. இங்கு பலர், மிகப்பெரும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். கோவிலை கையகப்படுத்தினால், தாங்கள் பாதிக்கப்படுவோம் என கருதிய முக்கிய புள்ளிகள், தொல்லியல் துறையால் ஊரே பாதிக்கும், என, பிரசாரம் செய்து, பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்ட, அதன் எதிரொலியாக, பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, இத்துறை முக்கிய அலுவலர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நேரடியாக பொதுமக்கள் கருத்தை அறிந்தனர். ஓராண்டு கடந்தும், இறுதி முடிவை அறிவிக்காமல், இத்துறை தாமதிக்க, "தினமலர் நாளிதழில், இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் காங்கிரஸ் எம்.பி., விஸ்வநாதன், முக்கிய பிரமுகர்களின் வற்புறுத்தலால், கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுமாறு, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை, இத்துறை திடீரென கைவிட்டுள்ளது. இது குறித்து, இத்துறையின் முக்கிய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பொதுமக்கள் எதிர்ப்பை கருத்திற்கொண்டு, நடவடிக்கையை கைவிட முடிவெடுத்தது. இதுபற்றி, எங்களுக்கு துறை ரீதியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார். இத்தகைய திடீர் முடிவால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: இப்பகுதியை பொறுத்தவரை, கோவில், தொல்லியல் துறையிடம் இருப்பதே சிறந்தது. அத்துறையால், வழிபாட்டில் எந்த தடையும் ஏற்படாது. கோவிலை ஒட்டி, அர்ச்சுணன் தபசு, குடைவரை மண்டபம் உள்ளதால், பாரம்பரிய சிறப்பு கருதி, கோவிலை கையகப்படுத்தியிருக்க வேண்டும். இதனால் கோவில் மேம்படுமே தவிர, சீரழியாது. சுயநல கும்பலால், கையகப்படுத்துவதை கைவிட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்; உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்றழைக்கப்படும்  ராமநாதபுரம் மாவட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இதில் ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடப்பதால், ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar