பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
புத்திக்கூர்மையுடன் செயல்படும் மிதுனராசி அன்பர்களே!
புதன் ராசிக்கு 4-ம் இடமான கன்னியில் இருப்பதால் பொருளாதார வளம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அவர் செப். 23ல், 5ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சுமாரான நிலை. குடும்பத்தில் சில பிரச்னைகள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம். சுக்கிரன் 5ம் இடமான துலாமில் இருக்கிறார். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். இவர் அக். 4ல், 6-ம் இடத்திற்கு செல்வது சிறப்பான இடம் அல்ல. முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.செவ்வாய் கடகத்தில் நீச்சம் அடைந்துள்ளார். பொருள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம். பகைவர் வகையில் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனால், செவ்வாய் அக். 9ல், 3ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். அங்கு அவரால் பல்வேறு முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சூரியன் உங்கள் ராசிக்கு 4ம் இடமான கன்னியில் இருப்பார். கடந்த மாதம் நன்மை தந்த அவரால் இப்போது நன்மை தர இயலாது. பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உடல் நலனிலும் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். குரு உங்கள் ராசியில் இருப்பதால் நன்மை தரமாட்டார். ஆனால், அவரது அனைத்து பார்வைகளால் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். சனிபகவானும் ராகுவும் சாதகமாக இல்லை என்றாலும் கவலை வேண்டாம். காரணம் அவை மீது குருவின் பார்வை பட்டுக் கொண்டிருக்கிறது. எது எப்படி அமைந்தாலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான கேது 11ம் இடத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். மற்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளை அவர் முறியடித்து வெற்றியை அள்ளித் தருவார்.
நல்ல நாட்கள்: செப்.20, 21,22,23,27,28,அக்.2,3,8,9,10, 11,1 2, 17
கவன நாட்கள்: அக்.13,14
அதிர்ஷ்ட எண்கள்: 4,8 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள். சூரியனுக்கு கோதுமை பாயாசம் வைத்து படைக்கலாம். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவுங்கள். பிரதோஷத்தன்று சிவன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.