பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
தன்னம்பிக்கையுடன் செயலாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லாததால் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் இந்த மாதம் பல முன்னேற்றம் காத்திருக்கிறது. அதற்கு விரைவாக சுழலும் கிரகங்களான சூரியன், சுக்கிரன், புதன் ஆகியோரே காரணம். புரட்டாசியில் சூரியன் ராசிக்கு மூன்றாம் இடமான கன்னியில் இருக்கும் இருக்கிறார். அதனால், நன்மை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும்.புதன் மாதத் தொடக்கத்தில் கன்னியில் ஆட்சி பெற்று இருக்கிறார். அவரால் சாதகமான பலனை தர இயலாது. பகைவரால் இடையூறு அவ்வப்போது தலை தூக்கலாம். அரசு விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. செப். 23ல் 4ம் இடமான துலாம் ராசிக்கு செல்வதால் நன்மை உண்டாகும்.சுக்கிரன் மாத தொடக்கத்தில் துலாமில் ஆட்சி பெற்று இருப்பது நல்லது. உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். சுக்கிரன் அக்டோபர் 4ல் விருச்சிகத்திற்கு மாறுகிறார். ஆனாலும், நன்மை தொடரும். பெரியோர்களின் ஆதரவால் பல்வேறு விஷயங்களைச் சாதிப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சுக்கிரனின் பலத்தால் கலைத் துறையினர் முன்னேற்றம் காண்பர். ராசியில் செவ்வாய் தற்போது நீச்சமாக இருப்பதால், முயற்சியில் தடை நேரும். பகைவரால் தொல்லை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். செவ்வாய் அக்.9ல் சிம்மத்திற்கு மாறுகிறார். பொருள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரலாம். தொழில் அதிபர்கள் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தலாம். தொழிலில் கவனமும், வரவுசெலவு கணக்கில் விழிப்பும் காட்டுவது நல்லது. செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் வருமானம் பெருகும். 4ல் சனி, ராகு இருப்பதும் குரு 12ல் இருப்பதும், கேது 10ல் இருப்பதும் சிறப்பு அல்ல என்பதால், ஓரளவே நன்மையை எதிர்பார்க்கலாம்.
நல்ல நாட்கள்: செப்.22, 23,24,25,26,29,30, அக்.1, 4,11,12, 13,14
கவன நாட்கள்: செப்.17,18,19, அக்.15,16
அதிர்ஷ்ட எண்கள்: 2,7 நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். செவ்வாய் கிழமை முருகன்,அம்பிகை கோவிலுக்கு சென்று வாருங்கள்.