பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
துணிவுடன் செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களான சனி, ராகு இரண்டும் 6-ம் இடத்தில் இணைந்திருந்து
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எடுத்த
முயற்சியில் வெற்றி ஏற்படும். குருவும் 2ல் இருந்து எந்த இடையூறையும் முறியடிக்கும்
வல்லமையைத் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுப விஷயங்களை நடத்திட
யோகம் உண்டாகும். செவ்வாய் 3ல் இருந்து நன்மை அளிக்கிறார். பணவரவு அதிகரிக்கும்.
செவ்வாயின் பலத்தால் ராணுவம், பாதுகாப்பு துறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
அக். 9ல் செவ்வாய் 4-ம் இடமான சிம்மத்திற்கு செல்வது நல்லதல்ல. தீயநண்பர்களின்
நட்புக்கு ஆளாகி அவதியுறலாம். இனம் தெரியாத நபரிடம் நெருங்கி பழக வேண்டாம். உடல்
நலனில் அக்கறை காட்ட வேண்டியது இருக்கும். புதன் 5-ம் இடமான கன்னியில் உள்ளார்.
அவரால் உங்களுக்கு நன்மை தரஇயலாது. குடும்பத்தில் பிரச்சினைவரலாம். செப். 23க்கு
பிறகு பிரச்சினை அகலும். காரணம் புதன் துலாமிற்கு சென்று நன்மை தர தொடங்குவார்.
எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி நடக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு
காண்பர். சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் ராசிக்கு 6-ம் இடமான துலாமில் இருப்பது
சிறப்பு அல்ல. முயற்சியில் தடை வரலாம். ஆனால் குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்
குறையும். அக். 4ல் விருச்சிகத்திற்கு செல்வதும் நல்லதல்ல. பெண்களால் பிரச்னை
நேரும். ஒதுங்கி இருக்கவும்.கன்னிராசியில் இருக்கும் சூரியனால் நன்மை கிடைக்காது.
பகைவர் தொல்லை அதிகரிக்கும். வியாதி ஏற்படும். கேது 12-ம் இடத்தில் இருப்பதும்
நல்லதல்ல. எது எப்படியானாலும் குருவின் பலத்தால் எந்த பிரச்சினைகளையும் முறியடித்து
வெற்றிகாணும் பலம் உண்டாகும். முக்கிய கிரகங்களால் பல்வேறு வளர்ச்சி உண்டாகும்
என்பது திண்ணம்.
நல்ல நாட்கள்: செப்.17,18,19,24,25,26,29,30,அக்.1,6, 7, 8,9,10,15,16
கவன
நாட்கள்: அக்.11,12
அதிர்ஷ்ட எண்கள்: 4,7 நிறம்: கருப்பு, நீலம்
வழிபாடு:
காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். சுக்கிரனுக்கு அர்ச்சியுங்கள். ஏழைகளுக்கு
இயன்ற உதவி செய்யுங்கள். பைரவர் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.